சர்வதேச நடுவர் குழாமில் முதன் முறையாக பெண் நடுவர் ஒருவரை சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) இணைத்துள்ளது.
கெத்தே க்ரொஸ் என்ற நியுசிலாந்தின் பெண் நடுவரே சர்வதேச கிரிக்கட் பேரவையின் 2014ம் ஆண்டுக்கான கிரிக்கட் நடுவர் குழாமில் இணைந்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கெத்தே குரொஸ் இதற்கு முன்னர் 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் இடம்பெற்ற மகளீர் கிரிகெட் உலக கிண்ண போட்டிகளின் நடுவர் குழாமிற்குள் இணைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி 55 வயதான கெத்தே குரொஸ் இனி வரும் காலங்களில், மகளீர் கிரிக்கட் போட்டிகளில் மாத்திரம் இன்றி, சர்வதேச மூன்றாம் தர கிரிக்கட் போட்டிகளிலும் நடுவராக கடமையாற்ற முடியும் என்று சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.





