நான் மன்னன் அல்ல பொறுப்பாளன் : ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!!

625

Mahindaநாட்டை ஆளும் மன்னன் தான் அல்ல எனவும் நாட்டின் தற்காலிகமான பொறுப்பாளன் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாகந்துர பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நான் இங்கு வரும் போது பிள்ளைகள் என்னை அன்புக்குரிய மன்னர் என்று கூறினார்கள். பிள்ளைகளே என்னை அன்புக்குரிய தந்தை என்று கூறினால் நான் மரியாதை செய்வேன், ஆசிர்வதிப்பேன். நான் நாட்டின் மன்னன் அல்ல. நான் தற்காலிகமான பொறுப்பாளன் என்றே கூறுகிறேன் என்றார்.