இலங்கையில் தொடர்ந்தும் அமுலில் உள்ள தடை : பொது மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!!

475

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

அதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி தமது அன்றாட பணிகளை நிறைவேற்றி கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொது மக்கள் சமூக இடைவெளியைப் பேணுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னுமொரு மாவட்டத்திற்கு சென்று குடியேறுவதற்கான தடை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊரடங்கு சட்டம் தொடர்பில் இலங்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.