மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டி சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு தர்ம அடி!!

442

Abuseபள்ளி மாணவியருக்கு ஆபாசப்  படம் காட்டி சில்மிஷம் செய்த கணித ஆசிரியருக்கு பொதுமக்கள், தர்ம அடி கொடுத்தனர். தப்பி ஓடி தலைமறைவான அவரை, பொலிசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புதூரில் அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, கணித ஆசிரியராக கோபி (31) என்பவர் பணியாற்றி வருகிறார்.

கடந்த 28ம் திகதி ஆசிரியர் கோபி அதே பள்ளியில் பணியாற்றும் உடற் கல்வி ஆசிரியர் ஜானிடம் ஏழாம் வகுப்பு மாணவியர் சிலரை தன் வீட்டுக்கு வந்து கணித பாடத்தில் சந்தேகம் கேட்டுச் செல்லும்படி கூறியுள்ளார்.

மேலும் தான் கொடுத்த 10 சி.டிக்களை மாணவியரிடம் கொடுத்து அனுப்பும் படியும் கூறியுள்ளார். ஜான் கொடுத்த சி.டி.,களுடன் ஐந்து மாணவியர் கோபி வீட்டுக்கு அன்று மாலை சென்றுள்ளனர்.

அவர்களிடம் இருந்த சி.டிக்களை வாங்கிய கோபி டிவியில் போட்டுள்ளார். அதில் ஆபாச பாடம் ஓடியதை கண்ட மாணவியர் அதிர்ச்சி அடைந்து வீட்டில் இருந்து வெளியே ஓட முயன்றுள்ளனர்.

வீட்டு கதவை மூடிய கோபி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவியர் 30ம் திகதி பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊர் பொதுமக்களுடன், ஆசிரியர் கோபி மீது நடவடிக்கை எடுக்க கோரி, பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, பள்ளிக்கு வந்த ஆசிரியர் கோபிக்கு தர்ம அடி கொடுத்தனர். அங்கிருந்து அவர் தப்பியோடினார். பொலிசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை.

தப்பியோடிய கோபியை கைது செய்தால் தான் கலைந்து செல்வோம் எனக் கூறி தொடர்ந்து, பள்ளியை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பொலிசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.