ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதியில் மக்கள் வெளியில் செல்வது எப்படி? பொலிஸார் விளக்கம்!!

594

வெளியில் செல்வது எப்படி?

வெளியில் செல்லும் போது தேசிய அடையாள அட்டை இலக்க முறைமை எவ்வாறு அமுலாகும் என்பது குறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில் வெளியே செல்லும் போது அடையாள அட்டை இலக்கங்களின் அடிப்படையில் செல்ல முடியும் என பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன விளக்கம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இந்த முறைமை அமுலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் ஏதேனும் மருத்துவ தேவைக்காக அல்லது மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு யாரேனும் வெளியே செல்ல வேண்டுமாயின் இந்த அடையாள அட்டை முறைமையில் விலக்கு அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையில் வெளியே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, திங்கட் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 1 அல்லது 2 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர். செவ்வாய்க் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 3 அல்லது 4 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.

புதன் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 5 அல்லது 6 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர். வியாழக் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 7 அல்லது 8 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.

வெள்ளிக் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 9 அல்லது 0 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.

உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே இவ்வாறு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அருகாமையில் உள்ள கடைகளில் தேவையான பொருட்களை முடிந்தளவு சீக்கிரம் கொள்வனவு செய்து வீடு திரும்ப வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை வரையறுப்பதற்காக இந்த தேசிய அடையாள அட்டை இலக்க முறைமை அறிமுகம் செய்யப்படுவதாக பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.