வெளிநாடுகளில் வீசா இன்றி தவிக்கும் இலங்கையர்கள்!!

536

இலங்கையர்கள்..

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் சுமார் 27 ஆயிரம் இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்புவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

இதில் 17 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள், 6 ஆயிரம் பேர் மாணவர்கள், 3000 பேர் குறுகிய கால வீசாக்களில் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் என இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோன வைரஸ் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் உள்ளவர்களை முன்னுரிமை கொடுத்து நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை செயலர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலைய வசதிகளும் கருத்திற் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குவைத்தில் அனுமதியின்றி தங்கியிருப்போருக்கான பொது மன்னிப்பு அவகாசத்தை நீடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ரவிநாத் ஆரியசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.