ஹன்சிகாவுடன் மீண்டும் ஆர்யாவின் சேட்டை ஆரம்பம்!!

450

Hansikaஆர்யா நடித்து வரும் மீகாமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்து வருகிறார். தமன் மியூசிக், சதீஷ்குமார் கேமராமேன். ஹீரோயின் இல்லாமலே ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து விட்டது.

இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன், த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா என பல ஹீரோயின்களுடன் பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் இவர்கள் நடிக்க முடியவில்லை.

இப்போது ஹன்சிகா நடிப்பது என்று முடிவாகியுள்ளது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் வருகிற 5ந் திகதி தொடங்குகிறது. இதில் கலந்து கொண்டு ஹன்சிகா நடிக்க உள்ளார்.