இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தில்!!

541

கொரோனா வைரஸ்..

இலங்கை கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது கட்டத்தில் இருப்பதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்டம் என்பது கொத்து கொத்தாக நோயாளிகள் ஆங்காங்கே அடையாளம் காணப்படும் சந்தர்ப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து நோயாளிகளுக்கும் வைரஸ் எந்த விதத்தில் பரவியது என்பதை கண்டறிய முடியும். சமூகத்தின் ஊடாக பரவும் நிலைமை இலங்கைக்குள் இன்னும் ஏற்படவில்லை. இந்த நிலைமையானது நான்காம் கட்டத்திற்கு வந்தால், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மக்களின் உதவியுடன் நடமாட்டங்களை முடிந்தளவில் குறைப்பதன் மூலமே அந்த நிலைமை ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் ஆகந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-