இலங்கையில் கொரோனா நோயாளிகள் இனம்காணப்படாத 4 மாவட்டங்கள் எவை தெரியுமா?

1113

கொரோனா நோயாளிகள்..

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே இதுவரையில் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் மிக அதிகளவில் கொரோனா நோய்த்தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 582 கொரோனா நோய்த்தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.