நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்!!

886

ஊரடங்கு சட்டம்..

நாளை (30.04.2020) முதல் நாடு முழுவது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4ம் திகதி காலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகள் தவிர்ந்த ஏனையவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் வரையில் செல்லுபடியாகும் வகையில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு முன்னதாக ஊரடங்கு சட்ட அனுமதித்திரங்களை காவல்துறையினர் வழங்கியிருந்தனர்.

எனினும், தற்பொழுது இந்த அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மே மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.