நாயால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நபர்!!

457

Jailநாய் குரைத்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலைக்குற்றத்தில் குற்றவாளியைத் தேடும் போது ஒரு நபரைப் பார்த்து பொலிஸ் மோப்ப நாய் குரைத்ததால் அவர்தான் குற்றவாளி என்று கைது செய்து கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு மும்பை உயர் நீதிமன்றம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மேலும் நாய் குரைத்தது ஒன்றைத் தவிர கைதிக்கு எதிராக ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லாத நிலையில் அவரை சிறையில் அடைத்திருப்பது தவறு என்றும் அவர் மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை என்றால் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.