யாழ் – மன்னார் வீதி விபத்தில் இருவர் காயம்!!

565

வீதி விபத்தில்..

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். சிறிய லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இவர்கள் காயமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அத்தியவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற சிறிய லொறியே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.