சிறப்பு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்குள் வந்த 230 பயணிகள்!!

422

இலங்கைக்குள் வந்த பயணிகள்

நெதர்லாந்தில் இருந்து 230 பயணிகளை ஏற்றிச் சென்ற சிறப்பு போயிங் 767 – 300ER விமானம் இன்று மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் (MRIA) தரையிறங்கியது.

இந்த விமானம் தெற்கு இலங்கையின் காலி துறைமுகத்தில் தங்கியிருக்கும் வணிகக் கப்பல்களுக்குத் தேவையான குழுவினர்களைக் கொண்டு வந்தது. சிறப்பு மனிதாபிமான அடிப்படையில் அவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வந்த பின்னர், பயணிகள் அனைவரும் இலங்கை விமானப்படையின் வேதியியல் அணு, உயிரியல் மற்றும் கதிரியக்க மறுமொழி பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறப்பு கிருமிநாசினி பணிக்கு உட்படுத்தப்பட்டு பேருந்துகள் மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையில், திரும்பிப் புறப்படவிருக்கும் இவ் விமானத்தில் நெதர்லாந்திற்கு புறப்படவுள்ள கப்பலில் 53 பணியாளர்கள் இன்று இரவு மத்தள விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.