அதிகம் விற்பனையாகும் 2 பொருட்கள்?
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியுள்ள நிலையில் இடைக்கிடை இந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் அதிகளவில் இரண்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊரடங்குச் சட்டம் இடைக்கிடை தளர்த்தப்படும் நேரங்களில் சீனி மற்றும் ஈஸ்ட் ஆகிய பொருட்களே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக மதுவரித் திணைக்களமும், காவல்துறையினரும் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை உற்பத்தி செய்வதற்காக இவ்வாறு சீனி மற்றும் ஈஸ்ட் ஆகிய பொருட்களை கொள்வனவு செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கடைகளில் சிகப்பு சீனியே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுக்கும் நோக்கில் காவல்துறையினரும், மதுவரித் திணைக்களத்தினரும் விசேட சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள உள்ளனர். ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரையில் 1022 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.