வயோதிபப் பெண்..
அரநாயக்க பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கக் கூடும் என சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் இன்றைய தினம் அதிகாலை உயிரிழந்துள்ளார்.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியானதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களில் குறித்த படைச் சிப்பாயின் பாட்டியே இவ்வாறு இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். அரநாயக்க ரெஹல மேற்குப் பகுதியில் இந்த வயோதிப் பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டதாகவும், உயிரிழந்த வயோதிப் பெண் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தாரா என்பது குறித்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.