சீன ஆய்வாளர்..
கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த கேந்திர நிலையமாக கருதப்படும் சீனாவின் வூகான் பிரதேசத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தின் ஆய்வாளர் எனக் கூறப்படும் ஷி ஷெங் லீ, கொரோனா சம்பந்தமான அனைத்து தகவல்களுடன் தனது குடும்பத்தினரோடு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷி ஷெங் லீ, கொரோனா தொடர்பான ஆவணங்களை அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் சம்பந்தமான ஆய்வில் ஈடுபட்டிருந்த ஷி ஷெங் லீ, தானும் தனது குடும்பத்தினரும் எங்கும் தப்பிச் செல்லவில்லை என வீ சேட் என்ற தகவல் பரிமாற்று சேவை வழியாக கூறியுள்ளார்.