சிமென்ட் கலவை லொறிக்குள் மறைந்து வீடு திரும்ப முயன்ற 18 தொழிலாளர்கள் : சிக்கிய வீடியோ!!

739

சிமென்ட் கலவை லொறிக்குள்..

இந்தியாவில் சிமென்ட் கலவை லொறிக்குள் மறைந்து உ யிரை பணயம் வைத்து ஊரடங்கை மீறி வீடு திரும்ப முயன்ற 18 தொழிலாளர்கள் பொலிசாரிடம் சி க்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கை மே 17ம் திகதி வரை நீட்டித்துள்ள மத்திய அரசு, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவித்துள்ளது. நாட்டில் புலம்பெயர்ந்து பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், சொந்த ஊருக்கு கூட திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் சிமென்ட் கலவையை ஏற்றிச் சென்ற லொறியை நிறுத்தி பொலிசார் சோதனை செய்த போது, அதில் மறைந்திருந்த 18 தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மேற்கு இந்தியாவின் மும்பையில் இருந்து வடக்கு மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர் என்று பொலிஸ் அதிகாரி கூறினார்.

அவர்கள் லொறியை சிறைபிடித்ததாகவும், தொழிலாளர்கள் இந்தூரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இது குறித்து முறையான புகார் பொலிசாரால் பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 24 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது, மேலும் வெள்ளிக்கிழமை மே17 வரை இன்னும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டது, இருப்பினும் சில பகுதிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

விமானம், ரயில், மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சாலை வழிப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய போக்குவரத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.