இன்று இரவு 7 மணிக்கு விளக்கேற்றுமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை!!

633

விளக்கேற்றுமாறு கோரிக்கை..

இன்று இரவு 7 மணிக்கு விளக்கேற்றுமாறு யாழ்ப்பாணத்தில் இயங்கும் சிவன் அறக்கட்டளை, இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உயிர்களை பாதுகாப்பதற்காக தமது உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் அங்கவீனமடைந்த பிள்ளைகளுக்காக யாழ்ப்பாணம், கண்டி, கல்பிட்டி ஆகிய இடங்களில் சிறுவர் இல்லங்களை நடத்தி வருகிறது.