இலங்கையில் பாரிய இடி, மின்னல் ஏற்படலாம் : சிகப்பு அறிக்கை வெளியானது!!

1157

இடி, மின்னல்..

பாரிய இடி, மின்னல்களுடன் கூடிய கனமழைப் பெய்யும் எனக் கூறி இலங்கை வளிமண்டவியல் திணைக்களம் இன்று சிகப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை இன்றிரவு 10.30 மணி வரை செல்லுப்படியாகும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், மத்திய, சபரகமுவை, தென், வடமேல், ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் ஆங்காங்கே மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் எனவும் பலத்த மின்னல்கள் ஏற்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.