கொரோனா வைரஸ்..
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று 68 பேருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எனினும், அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.
இதேவேளை, நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் விபரங்கள், போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 8 பேர். யாழ். போதனா வைத்தியாலை விடுதியில் சேர்க்கப்பட்டவர்கள் – 8 பேர்,
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டவர்கள் – 3 பேர். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டவர்கள் – 45 பேர்.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் – 9 பேர். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர். சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர். ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை – ஒருவர்.
-தமிழ்வின்-