வீட்டில் இருக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கு அரைச் சம்பளம் வழங்கத் தீர்மானம்!!

602

தனியார்துறை ஊழியர்களுக்கு..

வீட்டில் இருக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கு அரைச் சம்பளம் வழங்குவதற்கு தொழில்தருனர்கள், அரசாங்கத்திடம் இணங்கியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பணிக்கு திரும்ப முடியாது வீடுகளில் இருக்கும் தனியார்துறை பணியாளர்களுக்கு அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில் அரைவாசி அல்லது 14500 ரூபா இதில் எந்த தொகை பெரிய தொகையோ அந்தத் தொகை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

அரசாங்கத்திற்கும் தொழில் தருனர் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் தினேஸ் குணவர்தன, தொழில் ஆணையாளர் மற்றும் தொழில் தருனர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை ஒதுக்கவும் தொழில் தருனர்கள் இணங்கியுள்ளனர்.