திடீரென..
மொனராகல சியம்பலான்டுவ நகரத்தில் தனியார் நிதி நிறுவன கிளை முகாமையாளர் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி சியம்பலான்டுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
திடீரென நோய்வாய்ப்பட்ட குறைந்த நபர் 6ஆம் திகதி காலை 11.30 மணியளவில் சியம்பலான்டுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் வாயில் சளி போன்று காணப்பட்டாலும் அவர் விஷ மருந்து குடித்தமைக்கான எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை என சியம்பலான்டுவ வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை நேற்று மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றள்ளது. எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. இந்நிலையில் சடலத்தின் பாகங்கள் வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இவரின் மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கொழும்பிலும் திடீரென நபர் ஒருவர் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.