மக்கள் நடமாட்டமில்லாத காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

685

காலி முகத்திடல்..

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமையினால் மிகவும் அழகாக காட்சியளிப்பதனை காண முடிந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காணமாக கொழும்பு உட்பட சில பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேலதிகமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பரபரப்பாகவே காணப்படும் கொழும்பு காலி முகத்திடலுக்கு மக்கள் செல்லவதனை நிறுத்தியுள்ளனர். இதனால் குப்பைகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாமையினால் புற்கள் மீண்டும் வளர ஆரம்பித்துள்ளன.

மிகவும் பசுமையாக காலி முகத்திடல் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.

மேலும் கொழும்பில் தூசியினால் ஏற்படும் காற்று மாசு முழுமையாக குறைவடைந்து அழகிய இயற்கை காட்சிகளை இந்த நாட்களில் காண கிடைத்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.