பேரனுடன் வெசாக் கொண்டாடும் பிரதமர் மகிந்த ராஜபக்ச!!

622

மகிந்த ராஜபக்ச..

பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்கனவே பேரப்பிள்ளைக்கு தாத்தாவாகி விட்டார் என்பது அனைவருக்கு தெரிந்த விடயம்.

கடும் பணிகளுக்கு மத்தியிலும் அவர் தனது பேரனுக்காக நேரத்தை ஒதுக்க தவறுவதில்லை என பிரதமரின் குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் துரதிஷ்டவசமாக முழு உலகத்தையும் பாதித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக பௌத்தர்களுக்கு விகாரைகளுக்கும் வெளியிடங்களுக்கும் சென்று வெசாக் பண்டிக்கையை கொண்டாட இம்முறை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பிரதமரின் இல்லத்திலும் இதே நிலைதான்.

ஊரடங்குச் சட்டம் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்தவாறு வெசாக் பண்டிகையை கொண்டாட சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு இந்த வெசாக் பண்டிகை மிக முக்கியமான பண்டிகையாக அமைந்துள்ளது.

அவரது இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச தம்பதியினரின் மகன் நிர்வானுடன் வீட்டில் இருந்து கொண்டாடும் முதல் வெசாக் பண்டிகை இதுவாகும். பிரதமர் தனது இல்லத்தில் மகிழ்ச்சியாக வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பான புகைப்படங்கள் இணைத்தளங்களில் வெளியாகியுள்ளன.