கணவரின் உடலை அடக்கம் செய்ய வந்த இடத்தில் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

474

நெகிழ்ச்சி சம்பவம்..

தமிழகத்தில் கணவரை அடக்கம் செய்ய வந்த இடத்தில், பெண் ஒருவர் குழந்தைகளுடன், ஒரு மாதமாக போதிய உணவின்றி தவித்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வாகறையாம்பாளையம் பள்ளக்கோரையில் வசித்து வந்த தம்பதி அஞ்சலிதேவி-முனீஸ்வரன்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல்1-ஆம் திகதி முனீஸ்வரன் திடீரென்று நெஞ்சுவலியால் உ யிரிழந்தார். இதன் காரணமாக அவரின் விருப்பப்படி, அவரது உடலை சொந்த ஊரடான மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள, கடுப்பட்டி கிராமத்தில் மனைவி அஞ்சலி அடக்கம் செய்துள்ளார்.

கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய அஞ்சலி, ஊர் திரும்ப முடியாமல்(ஊரடங்கு காரணமாக), கைக்குழந்தைகளுடன் கணவரின் சகோதரில் வீட்டில் வசித்து வந்தார்.

அந்த பெண்ணின் வீட்டிலும் வறுமை தலைவிரித்தாடியதால், ஒரு மாதமாக போதுமான உணவின்றி, குழந்தைகளுடன் அஞ்சலி தவித்து வந்ததால், கோயமுத்தூர் செல்ல முடிவு செய்தார்.

ஆனால், அதற்கும் போதிய பணம் இல்லாமல் தவித்த அவருக்கு, ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் உதவியால், மாவட்ட ஆட்சியர் வினய்யை நேரில் சந்தித்து உதவி கோரினார்.

அவரின் நிலையை அறிந்த ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து தேவையான அரிசி, மளிகைப்பொருட்களை அளித்து சொந்த ஊருக்கு அஞ்சலிதேவியும், குழந்தைகளும் காரில் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் சமூகவலைத்தளங்களில் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.