இலங்கையில் கொரோனாவினால் 240 பேர் குணமடைந்தனர் : 575 பேர் சிகிச்சையில்!!

435

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் இன்றுகுணமடைந்துள்ளனர். அதற்கமைய கொரோனாவிலிருந்து குணமமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 இலிருந்து 240 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 27 பேரில் 26 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களது உறவினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, அண்மையில் டுபாயிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்றியிருப்பது நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 824 பேரில் தற்போது 575 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மேலும் 135 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.