கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு!!

545

கொரோனா தொற்று..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் இரவு வேளையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 11 கடற்படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இதன்படி கொரோனா தொற்றுக்கு இலக்கான கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 400 அக உயர்ந்துள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிசறை கடற்படை முகாமில் மேற்கொண்ட 300 பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் இந்த 11 கடற்படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, நேற்றைய நிலவரப்படி இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றாளிகளின் எண்ணிக்கை 835 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..