அர்ச்சகர்..
தமிழகத்தில் ஐம்பொன் சிலைகள் கொ ள்ளையடிக்கப்பட்ட கோவில் அர்ச்சகர் த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் வழக்கத்துக்காக மாறாக அவர் செய்த செயலால் கொ ல்லப்பட்டாரா என்ற கோ ணத்திலும் பொலிசார் வி சாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தில் குமார சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை கீழ் பழனி என பக்தர்கள் அழைக்கிறார்கள்.
இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான குமார சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய 3 சாமி சிலைகள் கடந்த பிப்ரவரி மாதம் ம ர்ம ந பர்களால் கொ ள்ளையடிக்கப்பட்டது.
மிகவும் ப ரபரப்பை ஏற்படுத்திய இந்த கொ ள்ளை சம்பவம் குறித்து சீர்காழி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கோவிலின் அர்ச்சகராக நடராஜன் (50) என்பவர் பணியாற்றி வந்தார்.
கோவில் வாசலில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார். அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் குன்னம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலிலும் நடராஜன் பூஜை செய்து வந்தார்.
கொண்டல் குமார சுப்பிரமணியசுவாமி கோவில் சிலைகள் கொ ள்ளையடிக்கப்பட்டதில் இருந்து குன்னம் சிவன் கோவிலுக்கு நடராஜன் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் துணைக்கு ஒருவரை அழைத்து சென்று வந்ததாகவும், மற்ற நேரங்களில் அவரது மகன்கள் குன்னம் கோவில் பூஜையை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கத்துக்கு மாறாக நடராஜன், மொபட்டில் தனியாக குன்னம் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.
அப்போது கீழமாத்தூர் என்ற ஊரில் வீரன் கோவில் பின்புறம் நடராஜன் ம ர்மமான முறையில் இ றந்து கிடப்பது தெரிய வந்தது.
இதன் முதற்கட்ட வி சாரணையில் சிலைகள் தி ருட்டு போனதால் பூஜைகள் செய்ய முடியவில்லை எனவும், தி ருட்டுத் தொடர்பாக அடிக்கடி பொலிசார் வி சாரணையால் அவர் ம ன உ ளைச்சலில் இருந்ததாகவும் அதனால் வி ஷமருந்தி த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது
அதே நேரத்தில் நடராஜன் வழக்கத்துக்கு மாறாக நேற்று தனியாக கோவிலுக்கு சென்றதற்கான காரணம் என்ன? குமார சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து சிலைகளை க டத்தி சென்ற க டத்தல்காரர்கள் அ வரை கொ லை செ ய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.