விடியலின் பாதையினூடாக வீட்டுக்கொரு தோட்டம் : விசேட வேலைத்திட்டம்!!

585

விடியலின் பாதை..

மக்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்வை கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்டு விடியலின் பாதை அமைப்பினால் வீட்டுக்கொரு தோட்டம் எனும் விசேட வேலைத்திட்டமானது நேற்றைய தினம் சொறிக்கல்முனையில் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

அமைப்பின் உறுப்பினர்களால் இவ் வேலைத்திட்டத்தின் நோக்கங்கள் நன்மை தீமைகள் செயல்முறைகள் தொடர்பாக தெளிவூட்டலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு விடியலின் பாதை அமைப்பின் மற்றுமொரு நிவாரண பணியானது கடந்த 06.05.2020 அன்று சொறிக்கல்முனையில் சிறப்பாக இடம்பெற்றது.

சொறிக்கல்முனை வாழ் சுமார் 40 குடும்பங்களுக்கு இவை பகிர்ந்தளிக்கப்பட்டது. இச் செயற்பாட்டிற்கு வெளிநாட்டு உறவுகள் மற்றும் பல நலன்விரும்பிகள் நிதியுதவி அளித்திருந்தனர்.


இச் செயற்பாட்டில் விடியலின் பாதை உறுப்பினர்கள் மற்றும் சொறிக்கல்முனை பிரதேச இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.