வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம்!!

474

கோவிட்-19 கண்காணிப்பு நிலையம்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஒன்றிணைந்து உழைப்போம் எமது உறவுகளுக்காக எனும் தொனிப்பொருளில் கோவிட்-19 கண்காணிப்பு நிலையம் வவுனியா வர்த்தக சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் வவுனியா வர்த்தக சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அமைக்கப்பட்ட இவ் கோவிட்-19 கண்காணிப்பு நிலையத்தினூடாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேற்கொள்ளும் மக்களுக்கான பயண அனுமதி பத்திரங்கள் வழங்கல்,

வெளிமாவட்டங்களுக்கு அத்தியவாசிய பொருட்களை ஏற்றுவதற்காக சென்று வரும் சாரதி, நடத்துனருக்குரிய கோவிட் -19 தொடர்பான பரிசோதனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கோவிட் -19 வைரஸ் தாக்கத்திலிருந்து வவுனியா மக்களை காப்பாற்றுவதற்கு வவுனியா வர்த்தக சங்கத்தினர் பல்வேறு விதமான செயற்பாடுகளை (மனிதனின் வெப்பத்தினை அளவிடும் கருவி, கிருமி நீக்கி தெளிக்கும் இயந்திரம், முகக்கவசங்கள் போன்ற) முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.