சிகையலங்கார நிலையங்களுக்கு..
கொவிட் 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் பூட்டப்பட்டிருந்த சிகையலங்கார நிலையங்களை மீள திறப்பதற்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை மண்டபத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபொற்ற கலந்துரையாடலின் போதே குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
அந்தவகையில், சிகையலங்கரிப்பு நிலையத்தை நடாத்துவதற்கான சான்றிதழ் சுகாதார வைத்திய அதிகாரியிடம் பெறப்பட்டு காட்சிப்படுத்த வேண்டும்,
முடிவெட்டுதல்- முடிக்கு டை பூசுவதல் மட்டுமே செய்ய வேண்டும், பணியாளர்களும்- வாடிக்கையாளர்களும் சவர்காரமிட்டு கை கழுவுவதற்கான ஏற்பாட்டினை நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செய்தல் வேண்டும்,
பணியாளர்கள் கட்டாயமாக முககவசம் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி அணிந்திருக்க வேண்டும், காலினால் செயற்படுத்தப்படும் கழிவகற்றல் கூடை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அவற்றை ஏற்றுக் கொள்ளும் சிகையலங்கார நிலையங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிபாளரின் அனுமதியுடன் இயங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரிகளான லவன், சுதாகரன், நகரசபை செயலாளர் இ.தயாபரன், பொது சுகாதார பரிசோதகர்கள், சிகையலங்கார நிலையங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் சுகதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கான மருந்துகள் மற்றும் பொருட்களும் சிகையலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.