மூன்று வயது மகளுடன் 900 கி.மீ நடந்த தாயார் : அன்னையர் தினத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!!

506

மூன்று வயது மகளுடன்..

உலக நாடுகள் அன்னையர் தினம் கொண்டாடும் நிலையில், இந்தியாவில் தாயார் ஒருவர் மூன்று வயதான தமது மகளுடன் 900 கி.மீ தொலைவில் இருக்கும் தமது கிராமத்திற்கு நடந்து செல்ல முடிவு செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா அ ச்சுறுத்தல் கோர தாண்டவம் ஆடும் நிலையில், எவ்வாறேனும் தமது பிஞ்சு குழந்தையை காப்பாற்ற போ ராடிய ஒரு தாயாரின் மனக்கருத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி நகருக்கு சுமார் 900 கி.மீ நடந்தே செல்ல முடிவு செய்துள்ளார் 25 வயதான ருக்ஷனா பானோ. வழியெங்கும் கண்ணில் படும் லொறிகளை அனைத்தையும் அவர் உதவி கேட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

மே மாத கொளுத்தும் வெயிலில் பிஞ்சு குழந்தையுடன் சாலையோரம் நடந்து செல்லும் ருக்ஷனா பானோவுக்கு ஒரு லொறியும் விவசாய டிராக்டர் ஒன்றும் சிறிது தொலைவு வரை உதவியுள்ளது.

சிறிய ஒரு பையுடன், தோளில் 3 வயது மகளுமாக அவர் நடந்து சென்றுள்ளார். அமேதி பகுதியில் ஜகதீஷ்பூர் கிராமத்தை சேர்ந்த ருக்ஷனா பானோ தமது கணவருடன் கடந்த 4 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

ருக்ஷனாவின் கணவர் இப்பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ருக்ஷனா கூலி வேலைக்கு சென்று வருகிறார். இருவரும் சேர்ந்து மாதம் 9000 ரூபாய் சம்பாதிக்கின்றனர். இதில் 3,000 ரூபாய் மகளுக்காக வங்கியில் சேமித்து வருகிறார்கள்.

இந்தூர் பகுதியில் கொரோனா பரவிய நிலையில் ஊரடங்கு அமுலில் கொண்டுவரப்பட்டு பல வாரங்கள் நீண்டுள்ளது. இதனால் வேலையை இழந்த ருக்ஷனா தமது சொந்த கிராமத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

இதனிடையே உறவினர்களும் அறிமுகமானவர்களும் என மொத்தம் 8 பேர் அமேதிக்கு நடந்து செல்லலாம் என்ற முடிவுக்கு வந்ததும், ருக்ஷனாவும் மகளுடன் அமேதி செல்ல அவர்களுடன் இணைந்துள்ளார்.

புதனன்று இரவு நடக்கத் தொடங்கிய இந்த குழுவினர் சனிக்கிழமை லக்னோ சென்று சேர்ந்துள்ளனர். அங்கிருந்து ஓய்வுக்கு பின்னர் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளனர். இந்த 900 கி.மீ தொலைவு அவர்கள் எப்போது தாண்டுவார்கள் என தெரியாமல் நடக்கத் தொடங்கியுள்ளனர் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன,