உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

967

உயர்தர பரீட்சை..

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் தமது கட்டணங்களை செலுத்தலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த கட்டணங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை உரிய முறையில் மேம்படுத்தப்படாதிருந்த பரீட்சைகளுக்கான கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் முறை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்கள தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனவே பரீட்சாத்திகள் தமது கட்டணங்களை அஞ்சல் கடைகளிலும் மேற்கொள்ளமுடியும் என்று அஞ்சல்துறை தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.