தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்..
வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியாவிற்கு வருகை தந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வவுனியாவில் 60க்கு மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த கடற்படை வீரர் சென்ற இடங்கள் சுகாதார துறையினரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் சென்ற வர்த்தக நிலையங்கள், வாகன திருத்துமிடங்கள்,
தனியார் நிறுவனங்கள் என்பவற்றில் சம்பவ தினம் கடமையாற்றியவர்களை சுகாதார பரிசோதகர்களும் பொலிசாரும் இணைந்து 14 நாட்களிலிருந்து 21நாட்கள் என தனிமைப்படுத்தினார்.
கடற்படை சிப்பாய் காரணமாக சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60க்கு மேற்பட்ட குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தனை நிறைவு செய்து கொரோனா தொற்று இல்லை என்பதினை உறுதிப்படுத்தியதன் பின்னர் சுகாதார பரிசோதகர்களினால் விடுவிக்கப்பட்டனர்.