ஸ்ரீலங்கன் விமான சேவைகள் 31 வரை தொடர்ந்து இடைநிறுத்தம்!!

794

ஸ்ரீலங்கன் விமான சேவைகள்..

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தமது பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைகளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாப் பயணத் தடைகளே இதற்கு காரணம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

எனினும் பொருளாதார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், லண்டன்,டோக்கியோ மற்றும் ஹொங்கொங் நகரங்களுக்கு இடையிலான பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா ஆலோசனைகளின் கீழ் பயணிக்கக் கூடிய பயணிகளுக்கு வசதிகளை வழங்கும் நோக்கில் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.