இலங்கையில் ஒன்றரை மாத குழந்தைக்கும் கொரோனா!!

472

கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 925 வரை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் பதிவாகிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 10 பேரில் 8 பேர் கடற்படைய சிப்பாய்களாகும். ஏனைய இருவரும் அவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்களில் ஒருவர் ஒன்றரை மாத குழந்தை என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 479 கடற்படை சிப்பாய்களில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.