சூரியனின் மேற்பரப்பில்..
சுமார் 93 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கும் சூரியனில் இருந்து கிடைக்கும் ஒளி மற்றும் வெப்பம் காரணமாகவே பூமியில் உயிர்கள் உயிர் வாழ்கின்றன.
எனினும் சூரியனின் மேற்பரப்பின் செயற்பாடு சற்று குறைவடைந்து, அதன் காந்தபுலன் பலவீனமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக அண்ட கதிர்கள் அதிகளவில் சூழலுக்குள் வெளியிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பூமியின் வெப்பம் குறைந்து, பூமியை பனி யுகத்திற்கு கொண்டு செல்லக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். எனினும் அச்சமடைய வேண்டாம் என மக்களிடம் கோரியுள்ள காலநிலை விஞ்ஞானிகள் மற்றும் பிரித்தானிய அரச வானியல் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்,
சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றமானது சூரியன் தன்னை தானே சுற்றி வரும் சுழற்சியின் போது 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சாதாரண நிகழ்வு என கூறியுள்ளனர்.