விசேட சோதனை..
வவுனியா வர்த்தக நிலையங்களில் காணப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாவட்ட செயலகம், பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் துரித நடவடிக்கையின் ஒரு கட்டமாக வவுனியாவில் உள்ள புடவைநிலையங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள்,
உணவகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு பொதுசுகாதார பரிசோதகர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர், பொலிஸ், இராணுவம் ஆகியோரை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு விஜயம் செய்து,
அங்கு பின்பற்றப்படும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் கண்காணிப்பதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கைகழுவும் இடம், சமூக இடைவெளி பேணல், முகமூடி அணிதல், வேலையாட்களின் நிலை என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதுடன்,
சுகாதார நடடைமுறைகளை பின்பற்றாத வர்த்த நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.