யாழ்ப்பாணத்தில்..
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கொரோனா எதிர்ப்பில் உடல் உள ஆரோக்கியம் முக்கியமானது மக்கள் பதற்றமடையக் கூடாது. கொரோனா தொற்றுத் தொடர்பான தகவல்கள் வெளியிடும் போது சம்பந்தப்பட்ட தரப்பினரது அவர்களது உறவினர்களது மனநிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயம் மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. சமூகத் தொற்றும் இல்லை. இங்கு இடம் இடம்பெற்று வருகின்ற பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.