மற்றுமொரு தொகுதி மருந்து பொருட்களுடன் இலங்கை வந்த சீன விமானம்!!

538

சீன விமானம்..

மற்றும் ஒரு தொகுதி மருந்து பொருட்களுடன் சீன விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் மூலம் மருத்துவ பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சீனாவால் இந்த மருந்து பொருட்கள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்காயில் இருந்து பயணத்தை ஆரம்பித்த இந்த விமானம் இன்று மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்நிலையில், இந்த மருந்து பொருட்கள் நாளைய தினம் இலங்கையில் உள்ள சீன தூதரகம் இலங்கை அரசிடம் கைளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.