அவசர எச்சரிக்கை..
இலவச மடிக்கணினிகளை வழங்குவதாக கூறி வட்ஸ்அப் ஊடாக தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் கும்பல் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
http://order.freelaptops.site என்ற இணைய முகவரி ஊடாக இவ்வாறு தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. “Government Providing Free Laptop For Youth” என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் பரவி வருவதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் பல நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் குறித்த குழுவினருக்கு சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாக சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு பொருட்களை இலவசமாக வழங்குவதாக கூறி தகவல் திருடும் செயற்பாடு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மக்களிடம் சங்கத்தின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.