நாளை முதல் முகமூடி கட்டாயம் : மீறினால் 1 கோடி அபராதம்!!

750

1 கோடி அபராதம்..

முகமூடி அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு, இலங்கை மதிப்பில் ஒரு கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று கத்தார் அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

உலகையே அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு, பல்வேறு நாடுகள் முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் குறைந்தாலும், ஒரு சில நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. அந்த வகையில், வளைகுடா நாடான கத்தாரில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 733 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28ஆயிரத்து 272-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கத்தார் உள்துறை அமைச்சர் டுவிட்டர் பக்கத்தில், வரும் ஞாயிறு முதல் வெளியே செல்வோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது.

உத்தரவை பின்பற்ற தவறுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் வரை அபராதமும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். தனியாக வாகனத்தை ஓட்டி வரும் நபருக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.