சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய பிரேரணைக்கு இலங்கை எதிர்ப்பு!!

418

Sri Lanka Cricketசர்வதேச கிரிக்கெட் சபையின் நிர்வாக, வருமான அம்சங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் அதனோடு இணைந்த நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஏகமனதாக இந்த எதிர்ப்பை தெரிவிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) நிர்வாக, வருமான அம்சங்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையினை முழுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய பிரேரணையொன்றை இந்திய, இங்கிலாந்து மற்றும்அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆகியன தயாரித்துள்ளன.



வருமானத்தில் அதிக பங்கு, நிர்வாகத்தில் முழுமையான ஆதிக்கம், டெஸ்ட் பிரிவுகளில் குறித்த 3 கிரிக்கெட் அணிகளும் தரம் இறக்கப்பட முடியாத தன்மை உட்பட பல அம்சங்கள் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இப்பிரேரணைக்கு நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து ஆசிய நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியன எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

புதிய பரிந்துரைகள் பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் சபை வலியுறுத்துகிறது. ஆனால் ஐ.சி.சி.யின் முக்கிய தீர்மானம் எடுப்பதில் மூன்று நாடுகளுக்கு மாத்திரம் அதிக அதிகாரம் வழங்குவதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முற்றாக நிராகரிப்பதாக தெரியவருகிறது.