பலவந்தமாக 54 இலங்கையரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!!

411

Ausகடல் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக சென்று கிறிஸ்மஸ் தீவுகளில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 54 பேர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நேற்று இரவோடிரவாக கைது செய்து பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பத்தகு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் கடந்த 1 வருடமாக தடுப்பு காவலில் வைக்கப்படிருந்து, எந்தவித அறிவிப்பும் இன்றி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தனிப்பட்ட விமானம் முலம் நாடுகடத்தப்படுள்ளனர்.

இவர்களில் பலர் விடுதலைப் புலிகளை சேர்ந்த முன்னாள் போராளிகள் என சந்தேகிக்கக்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவைத் தெரிவிப்போம் என அவுஸ்திரேலிய அரசப் பிரதிநிதியொருவர் அறிவித்துள்ள சில மணித்தியாலங்களுக்குள் அங்கு தஞ்சம் கோரியிருந்த தமிழ் மக்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.