ஐந்து இலட்சம் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை!!

841

ஐந்து இலட்சம் இலங்கையர்களுக்கு..

ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது தொழில்களை இழக்க நேரிடக்கூடிய அபாயத்தில் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதிகள் முதல் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் வரையில் இவ்வாறு தொழில்களை இழக்க நேரிடலாம் எனவும், கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கமே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

200 பில்லியன் பணத்தை அச்சிட்டமையானது நாட்டின் பணவீக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். அனர்த்த நிலைமைகளின் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தினால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் எனவும், ஏனெனில் உள்நாட்டு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு சில மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.