கட்டாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று!!

538

கட்டாரில்..

கட்டாரில் நாட்டில் தொழில் புரிந்து வரும் ஆயிரத்து 51 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது.

கட்டாரில் 42 ஆயிரத்து 213 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 8 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி கத்தாரில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தொழில் புரிந்து வருவதாக அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 79 வீதமானவர்கள் தொழிலாளிகள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள். ஏனைய 21 வீதமானோர் தொழில் சார்ந்த நிபுணர்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இலங்கை திரும்ப ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளர்.