பாண் விலையை அதிகரிக்க நேரிடும் : பேக்கரி உரிமையாளர் சங்கம்!!

977

பாண் விலை..

இறக்குமதி செய்யப்படும் மாஜரீன் மற்றும் பாம் ஒயில் என்பவற்றுக்கான இறக்குமதி வரிகளை அதிகரிக்க தீர்மானித்தமை காரணமாக பேக்கரி உரிமையாளர்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் காரணமாக தேசிய மாஜரீன் உற்பத்தியாளர்கள்,

அதன் விலைகளை அதிகரிக்க தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார். இதனால், பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.