ஒற்றைச் சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் நேர்ந்த விபரீதம் : இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

538

இளம் குடும்பஸ்தர்..

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டன்பார் பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற திடீர் விபத்தில் நபரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக் கொண்டிருக்கையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அதிக வேகத்தில் ‘ஒற்றை சில்லை பயன்படுத்தி’ மோட்டார்சைக்கிள் செலுப்பட்டுள்ளதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டன்பார் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான (30 வயது) புத்திக பிரசாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.