மட்டக்களப்பில் நடந்த கோர விபத்தில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!

893

Accidentமட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் நடந்த விபத்தில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

இன்று மதியம் ஒருமணியளவில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் இருசக்கர வாகனம் ஒன்று சுகாதார அமைச்சின் வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தாயும் மகளும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சுகாதார அமைச்சின் வாகனத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில் இரு வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதாகவும் இந்த கோர விபத்தைப் பார்த்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

-ரமணன்-