போக்குவரத்து சேவை..
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கபட்டுள்ளன. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் இருந்தும் ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கபட்டுள்ளது.
வவுனியாபுதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளதுடன், வடக்கு மாகணத்தின் ஐந்து மாவட்டங்களிற்கும் ஏனைய மாகாணங்களிற்கும் குறித்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிசெல்லும் பேருந்துகள் நீர்கொழும்பு பகுதி வரை தமது சேவைகளை மட்டுப்படுத்தியிருந்தது. கொவிட் 19 தாக்கத்தை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளிற்கமைவாக பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.